சர்க்கரை நோய் - முன்னுரை
1.தொற்றும் தன்மை உள்ள நோய்கள்
தொற்றும் தன்மை உள்ள நோய்கள் கிருமிகள் மூலமாக பரவுபவை, (எ.கா) பாக்டிரியா, வைரஸ் இவற்றிற்கு சிகிச்சை முறைகள், தடுப்பு முறைகள், தடுப்பு ஊசிகள் உள்ளது…
2.தொற்றும் தன்மை அற்ற நோய்கள்
(எ.கா) சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, ஆஸ்துமா, புற்றுநோய்,,,
இவை அனைத்தும் மரபணுக்கள் சார்ந்தவை (பரம்பரை) இவற்றை நம்முடைய முக்கால் பங்கு அன்றாட வாழ்கை முறை மாற்றங்களால் தடுக்கலாம் தப்பிக்கலாம்.
தொற்றும் தன்மை அற்ற நோய்களின் தலைவர் சர்க்கரை நோய், நம்நாடு சர்க்கரை நோயின் உலக தலைநகர், இது கசப்பான செய்தி ஆனால் சர்க்கரை நோய் சிகிச்சையில் முக்கால் பங்கு நோயாளி மற்றும் குடும்பத்தினர் கையில் உள்ளது. மருந்து மாத்திரைகள் கால் பங்கு தான் இது நம்பிக்கை ஊட்டும் செய்தி மருந்தில்லா, செலவில்லா சிகிச்சைக்காக உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றங்களுக்கான பயிற்சி பெற்று செயல்படுத்துவதின் மூலமாக நோய் வருமுன் காக்க வந்தபின் தப்பிப்பதற்க்கு வழிமுறைகள் (சிகிச்சை) உள்ளன. வேறுவிதமாக சொல்ல வேண்டும் என்றால் சர்க்கரை நோய் பரம்பரை வியாதி, உங்களின் விதி உங்கள் வாழ்கை முறை மாற்றங்களான (உணவு, உடற்பயிச்சி) இவை உங்களுடைய மதியை பயன்படுத்தி செலவில்லா சிகிச்சைக்கான பயிற்சி மூலம் விதியை மதியால் வெல்லலாம், சர்க்கரை நோய் வெளிப்படாமல் தடுக்கலாம், வந்தபின் பாதிப்புகள் ஏற்படாமல் தப்பிக்கலாம்.
சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழிழும் மன(நா)ப்பழக்கம் (மனப்பதிவு),
என்ற பழமொழிக்கு இணங்க பின் வரும் பதிவுகளைபடித்து பயன்பெறுங்கள்!!!
வாழ்க வள நலமுடன்,,,
மருத்துவர் ஜி.சந்தானம்
மயிலாடுதுறை.
Good evening Sir. Valliappan from Annamalai University. Nice introductionn Sir. Happy to hear from you.
ReplyDeleteThanks for information IYYAPPAN SIRKALI
ReplyDeleteஅருமையான பதிவு. வாழ்த்துக்கள் சார்
ReplyDelete