Monday, February 21, 2022

சூடான சுவையான பரோட்டா (மைதா என்னும் உயிர் கொல்லி)

 சூடான சுவையான பரோட்டா 

(மைதா என்னும்  உயிர் கொல்லி)



 

மைதா என்பது விளை தானியம் அல்ல. கோதுமை அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பின்பு கிடைக்கும் கழிவுதான் மைதா.

மைதாவை பொதுவாக போஸ்டர் (சுவர் ஒட்டி) ஒட்ட பயன்படுத்துவார்கள்  ஆனால் நாம் அதை உணவாக பயன்படுத்துகிறோம்.( பரோட்டா, நான்,அடுமனை தின்பண்டங்கள் - பேக்கரி)   

மைதாவை சாப்பிடுவதால் உடல் பருமன், செரிமான பிரச்சனைகள்  உருவாகிறது

மைதாவிற்கும் சர்க்கரைக்கு உள்ள தொடர்பை பின்வரும் கதையில் பார்ப்போம்: 

கோதுமை அரைக்கப்பட்டு சுத்திரிக்கப்பட்ட பின்பு கிடைக்கும் மைதா ஆரம்பத்தில் மஞ்சள் நிறமாக இருக்கும் அதனை வெண்மையாக மாற்ற வெள்ளையாக பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl peroxide) என்ற கெமிக்கலில் கலவை செய்யப்பட்ட பின்பு தான் வெள்ளை நிறமாக மாறுகிறது இந்த பென்சாயில் பெராக்ஸைடு கெமிக்கலானது சைனா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் "தடை செய்யப்பட்டுள்ளது" என்பது குறிப்பிடத்தக்கது 

சர்க்கரை நோயை உருவாக்கும் மைதா :

இதை விட கொடுமை என்னவென்றால் இந்த மைதாவை மென்மையாக்குவதற்கு அலோக்சான் (ALLOXAN) என்ற வேதிப்பொருள் (கெமிக்கல்) சேர்க்கப்படுகிறது. 

அலோக்சான்(ALLOXAN) என்ற வேதிப்பொருள் எப்படி சர்க்கரை நோயை உருவாக்குகிறது:

ஒரு நிறுவனம் சர்க்கரை நோயிற்கான மருந்தை கண்டுப்பிடித்தால் அது சர்க்கரையின் அளவை எப்படி கட்டுப்படுத்துகிறது என்று கண்டறிய மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யமுடியாது, எனவே எலி அல்லது விலங்குகள் மூலம் பரிசோதனை செய்வார்கள் அப்படி எலிக்கு பரிசோதனை செய்ய வேண்டுமானால் எலிக்கு முதலில் சர்க்கரை நோய் உருவாக்கவேண்டும் ஆக இன்சுலின் சுரக்க கூடிய பீட்டா செல்லை (கணையத்தில் உள்ள செல்) அழித்துவிட்டால் இன்சுலின் சுரக்காது இன்சுலின் இல்லாத காரணத்தால் எலியின் உடம்பில் சர்க்கரை நோய் உருவாகிறது. இதன் பின்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை எலிக்கு கொடுத்து பரிசோதனை செய்வார்கள். இன்சுலின் சுரக்க கூடிய பீட்டா  (இன்சுலின் உற்பத்தி தொழிற்சாலை) செல்லை அழிக்க பயன்படுத்த கூடிய ஒரு வேதிப்பொருள்தான்(கெமிக்கல்)அலோக்சான்(ALLOXAN)

இந்த அலோக்சனை மைதாவில் கலப்பதால் நம்முடைய கணையத்தில் உள்ள இன்சுலின் உருவாக்க கூடிய பீட்டா செல் அழிந்து சர்க்கரை நோய் அதிகப்படும். 


எப்போது நாம் பசிக்கு சாப்பிடாமல்

ருசிக்கு சாப்பிட ஆரம்பித்து விட்டோமோ

அப்பவே நாம் விஷத்தை சாப்பிட ஆரமித்து விட்டோம்

என அர்த்தம்

ஒருநாள் தானே சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என அலட்சியம் வேண்டாம் ஒரு துளி விஷம் என்றாலும் விஷம் தான்  (மெல்ல கொல்லும்).  


 



Monday, February 14, 2022

சர்க்கரை நோயின் முக்கியமான வகைகள்

                             சர்க்கரை நோயின் முக்கியமான வகைகள்                                                      

சர்க்கரை நோயை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

டைப் 1 (TYPE-1)

டைப் 2 (TYPE-2)

முதல் வகை (TYPE-1) 

நம் நாட்டில் 100-ல் 2 பேருக்கு தான் இந்த டைப் 1 உள்ளது.

சில வகை சிகிச்சைக்கான மருந்துகள், சில கிருமி தாக்குதல்கள் அல்லது நோய்த்தொற்று காரணமாக இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள் அழிகின்றன. அத்தகைய சமயங்களில் இன்சுலின் உற்பத்தி இல்லை இந்தக் காரணத்தால் ஏற்படும் சர்க்கரை நோய்க்கு  டைப் 1 என்று பெயர். இந்த டைப் 1நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட வேண்டும். 

இரண்டாம்வகை (TYPE-2)  

நம் நாட்டில் 100-க்கு 95-98 பேருக்கு இந்த டைப் 1 உள்ளது. 

1.இன்சுலின் செயல் திறனில் குறைபாடு (Inefficient action) 

இன்சுலின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை எனப்படும் பீட்டா செல்கள்  போதிய அளவில் இருந்தாலும் அவற்றின் செயல்பாட்டில் குறை இருக்கும் அதனால் (பிற்காலத்தில்) இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடும்  (பரம்பரையாக)

2.இன்சுலின் சுரப்பில் குறைபாடு (Insufficient secretion) 

இன்சுலின் சுரக்கும் தொழிற்சாலை (கணைய பீட்டா செல்கள்) போதிய அளவு வேலை செய்யாமல் இன்சுலின் சுரப்பில் குறைபாடு. 

உடல் அதிக பருமனாக உள்ளவர்கள், அதாவது தங்களுடைய உடல் உழைப்பு, உயரம், வயது இவற்றை மனதில் கொள்ளாமல் தேவைக்கு அதிகமாக உண்பவர்களுக்கு இது ஏற்படுகிறது.

                                           சிந்திபீர்!!!

உலக அளவில் டைப்-1 அதிகமாக உள்ள நாடு பின்லாந்து ஆனால் இந்தியாவைவிட முதல்வகை (டைப் -1) சர்க்கரை நோய் அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா, உலக அளவில் இரண்டாம்வகை (டைப் 2) சர்க்கரை நோய் அதிகமாக உள்ள நாடு இந்தியா மற்றும் சீனா. 

முதல்வகை சர்க்கரை நோய் (டைப்-1) 

சிறுவயது முதலே இந்த நோய் வருவதால் அவர்கள் சுயகட்டுப்பாடு  உடன் உள்ளார்கள் அதாவது தினசரி ஒரு நாளும் விடாத உடற்பயற்சி மற்றும் உணவுமுறை மற்றும் இன்சுலின் ஊசிபோடுதல் போன்ற பழக்கங்கள் அவர்களை நெறிமுறைபடுத்துகிறது. ஆகையால் அவர்களது உடல் ஆரோக்கியமாக உள்ளது  (எ. கா)  ஓர் சிறந்த நடிகர் அரசியலில் கால் பதித்திருக்கிறார்.

        உடல் ஆரோக்கியம்! 

        மனம் தெளிவு பெறு!!

         தன்னம்பிக்கை வளரும்!!! 

         செய்யும்  தொழில் சிறப்பாக செய்ய முடியும்!!!! 

உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனம் தெளிவாக இருக்கும்! 

மனம் தெளிவாக இருந்தால் தன்னம்பிக்கை இருக்கும்!! 

தன்னம்பிக்கை இருந்தால் செய்யும் தொழிலில் முன்னேற்றம்!!! 

பொருளாதாரத்திலும் முன்னேற்றமாக  அமையும்!!!! 

இரண்டம் வகை சர்க்கரை நோய் (டைப்-2)

 நம் நாட்டில் இரண்டாம் வகை சர்க்கரை நோய் அதிகம் உள்ளது சில,பல நபர்களுக்கு 20 வயதிற்கு மேல் தான் சர்க்கரை வெளிப்படும் அல்லது எந்த வயதில் வேண்டுமானாலும் சர்க்கரை நோய் வெளிப்படும், அதற்கு முன்பு எந்த சுய கட்டுப்பாடும் இல்லாமல் உடற்பயிற்சியும் ,உணவுமுறையும் கடைப்பிடிக்காதல் எவ்வளவு திறமை இருந்தும் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதே சோகமான உண்மை. 

   உன் வாழ்க்கை உன் கையில்!

 காலம் நம் கையில் உள்ளது!!

இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்க வேண்டாம்!!!

உடற்பயிற்சி!!!! 

உணவுமுறை!!!!! 

சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு அறிந்து,

 அதனை செயல்படுத்தினால் சர்க்கரை நோயை வென்ற-வாழ்க்கை மட்டுமல்லாது பொருளாதார நிலையிலும் முன்னேற முடியும்...

Wednesday, February 9, 2022

சர்க்கரை நோய் உருவாகும் கதை

 சர்க்கரை நோய் உருவாகும் கதை





 

மனித உடல் அமைப்பு :

செங்கற்களால் கட்டிடம் உருவாவது போல் - பல செல்களால்தான் மனித உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

செங்கல் - பல செங்கற்கள் (சுவர்) - நான்கு சுவர்கள் (அறை) - பல அறைகள் கொண்டது வீடு 

செல் - பல செல்கள் - திசுக்கள் தசைகள் - உடல் உறுப்புகள் - முழு மனித உடல். 

செல் தொழிற்ச்சாலை (மனித உடல் அமைப்பு மற்றும் செயலாக்கத்திற்கான மூலக்கூறு) 

செல் தொழிற்சாலை (நம் உடல் உறுப்புகள் இயக்கம்) இயங்க தேவையான மூலப் பொருள்கள் (சர்க்கரை சத்து,புரத சத்து, கொழுப்பு சத்து) உள்ளே செல்ல முக்கிய வாயில் பூட்டை திறக்கும் "மந்திரசவிதான் இன்சுலின்" 

இந்த இன்சுலின் குறைபாட்டால்தான் உறுப்புகளின் செல் தொழிற்சாலை முறையாக செயல்படாமல் அதிக உணவு உட்கொண்டு - பயன்படாமல் போவதால் - சர்க்கரை நோய் உருவாகி சோர்வு களைப்பு ஏற்படுகிறது. சிறிது சிறிதாக பாதிக்கப்பட்ட செல் தொழிற்சாலை பல வருடங்களில், முழுமையாக செயல் இழந்து, உறுப்புகளின் தாக்கத்திற்கேற்ப - ஹார்ட் அட்டக்க்காகவோ, கை, கால் பக்கவாதமாகவோ, கிட்னி பெயிலியராகவோ - அலைக்கழித்து, கசைக்கரைத்து வாழ்நாட்களை நீட்ட வைக்கிறது - சர்க்கரை நோய்.

இந்த மந்திர சாவியான இன்சுலின் குறைபாட்டை நிவர்த்திக்க கடைபிடிக்கும் வழிகள்தான் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை ..,


  

Saturday, February 5, 2022

சர்க்கரை நோய் என்ன விலை?

 சர்க்கரை நோய் என்ன விலை?

நோயாளியின் தனி மனித உழைப்பு, குடும்ப பொருளாதாரம், அடிக்கடி விடுப்பில் செல்வதால் அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் தாக்கம், மற்றும் நம் நாட்டின் பொருளாதாரத்தில் ( 100க்கு 12 பேர் சர்க்கரை நோயாளிகள் ) ஏற்படுத்தும் பண (மன) சுமை தான் சர்க்கரை நோய்க்கு இன்றைய உலகத் தலைநகரான இந்திய நாட்டின் குடிமக்களான  நாம் கொடுக்கவேண்டிய விலை..,


சர்க்கரை நோயிற்காக செய்யப்படும் செலவு 

உலக அளவில் ஒரு வருடத்திற்கு இந்திய பணமதிப்பில் ரூபாய் 60 லட்சம் கோடி 

இந்திய அளவில் ஒரு வருடத்திற்கு 

ரூபாய் 5 லட்சம் கோடி 


விலை என்பது 

1.நேரடியான பண செலவு: 

  • மருத்துவ சிகிச்சை 
  • பரிசோதனைகள் 
  • டாக்டர் கட்டணம் உள்ளிட்டவை 

இது நோயின் தன்மையைப் பொறுத்து மாறுபடும் 

மறைமுகமான செலவு 

  • வேலைக்கு செல்ல முடியாததால் உண்டாகும் மற்ற செலவுகள், உதாரணமாக கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மனைவி வேலைக்கு செல்லாமல் லீவு எடுக்க வேண்டியது வரும் .
  • உணவு ஹோட்டலில் வாங்க வேண்டியது வரலாம்.(ஹோட்டல் உணவினால் ஏற்படும் பாதிப்புகள்) 
  • உறவினர்கள் பல இடங்களிலிருந்து பார்க்க வரும் செலவு போன்றவைகள்.
  • நான்காம் நிலை மற்றும் இறுதி நிலையில் உள்ள நோயாளிகளின் உழைக்கும் திறன் ,வருவாய் ஈட்டும் திறன் குறைவதால் குடும்பத்திற்கும்,நாட்டின் பொருளாதாரத்திற்கும் மறைமுகமாக ஏற்படும் இழப்பு.    

Friday, February 4, 2022

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள்?

 

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள்?




இருதய பாதிப்பு 
( HEART ATTACK )



சிறுநீரகம் பாதிப்பு
( KIDNEY FAILURE )



மூளை பாதிக்கப்பட்டு 
கை, கால் பக்கவாதம்  
( PARALYSIS ATTACK )



கண் பார்வை பாதிப்பு
( EYE PROBLEM )



கால் விரல் இழப்பு, கால் இழப்பு 
( LIMB AMPUTATION )
 












Thursday, February 3, 2022

சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் என்ன ?

 சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்:

 

அதிக தண்ணீர் தாகம்


அதிக பசி 


அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 

எடை குறைதல்


சோர்வு, அசதி 

மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் மட்டும்தான் சர்க்கரை நோய் உள்ளது என அர்த்தம் இல்லை, 

சர்க்கரை நோய் எந்த அறிகுறிகள் இல்லாமலும் இருக்கும் (மறைந்திருக்கும்)...

 





 



Wednesday, February 2, 2022

சர்க்கரை நோய் என்றால் என்ன ?


  சர்க்கரை நோய்  என்றால் என்ன? 


        சர்க்கரை நோய் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பு சர்க்கரையை பற்றி பார்ப்போம். 


        பொதுவாக சர்க்கரை என்றால் இனிப்பு என்று தான் எல்லோரும் சொல்வார்கள், சர்க்கரை நோயை பொருத்தவரை அது தவறு.


        நாம்  ஒரு செயலினை செய்ய  அதாவது எழுத,  நடக்க,  உட்கார, ஏன் தூங்ககூட  நமக்கு சக்தி  தேவைப்படுகிறது  அந்த சக்தியை அளிப்பது சர்க்கரை அல்லது குளுக்கோஸ். 


சர்க்கரை என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் உள்ளது 


சர்க்கரை - இனிப்பு சுவை கொடுப்பது 


சர்க்கரை - சக்தி அளிக்கக்கூடிய குளுக்கோஸ் 


        இந்தச் சக்தியைத் தருவது குளுக்கோஸ்  என்கிற சர்க்கரைச்சத்து, இது எங்கே கிடைக்கிறது?

 

        நம் உணவில் உள்ள மாவுசத்து (இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், அரிசி, கோதுமை) புரதசத்து, கொழுப்புசத்து, பொருட்களிருந்து கிடைக்கிறது. நம்முடைய குடல் நாம் சாப்பிடும் உணவு பொருள்களை குளுக்கோசாக மாற்றி இரத்தத்தின் வழியாக எல்லா உறுப்புகளில் இருக்கும் செல்களுக்கும் அனுப்புகிறது. 


        இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அப்படியே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள பல உறுப்புகளுக்கு தெரிவதில்லை அதற்கு இன்சுலின் என்ற ஒரு இயக்குநீர் (ஹார்மோன்) தேவைப்படுகிறது அதாவது இன்ஸ்சுலின் உடல் உறுப்புகளின் செல்கள் செயல்பாட்டுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றித்தருகிறது. 


        இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது பான்கிரியாஸ் என்ற கணையச்சுரப்பி, குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த சுரப்பியில் இருக்கும் பீட்டா செல்கள். இந்த பீட்டா செல்கள் ஒவ்வொன்றும் இன்சுலின் தயாரிக்கும் தொழிற்சாலைகள். இது  மனித உடல் அமைப்பின் இன்சுலின் தயாரிக்கும்  தொழிற்சாலையான பீட்டா செல்கள் அடங்கிய பான்கிரியாஸ், இரைப்பையின் பின்புறம் அமைந்துள்ளது. 

  

        இன்சுலின் தயாரிப்பு  உடலில் சீராக  நடைபெறும்பொழுது  எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. இரத்தத்தில்  சர்க்கரை  அளவும் கட்டுப்பாட்டில் 80 -120 மில்லி கிராம்ஸ் அளவுக்கு இருக்கிறது. 


        ஆனால் இந்த இன்சுலின் "தயாரிப்பிலோ"(Insulin Production) அல்லது "செயல்பாட்டிலோ"(Insulin Action) குறைப்பாடு ஏற்படும் பொழுது உடல் உறுப்புகளின் செல்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் உடல் இயக்கத்திற்கு போதிய சக்தி  கிடைக்காமல் முழி பிதுங்குகிறது, அதனால் இரத்தத்தில் சர்க்கரை கூடுகின்றது. இரத்தத்தில்  ஒரு குறிப்பிட்ட அளவை சர்க்கரை  தாண்டும் பொழுது கூடுதல் சர்க்கரை வெளியேற்றியே (அளவுக்கு  மிஞ்சினால் அமிர்தமும் விஷம்) ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அதிகமான சர்க்கரை நீர்த்தாரைகளை அடைத்துக் கொண்டால் அபாயமாகிவிடும். இந்த பிரச்சனையைத் தடுக்கிறேன் என்று சீறுநீரகம் உடல் தேவைக்கு அதிகமுள்ள இரத்த சர்க்கரையை சிறுநீரில் கரைத்து வெளியேற்றுகிறது.

 

        இந்த நிலை நீடிக்கும்பொழுது உடலின் பல செல்கள் வயலில் தண்ணீர் விடாத பயிர் போல வறண்டு செயலிழந்துவிடுகின்றன.  இதனால் தான் சர்க்கரை நோயளிக்கு களைப்பும், அசதியும், அதிக தண்ணீர் தாகமும் ஏற்படுகின்றது. சிறுநீர் மூலம் சக்தியை இழப்பதனால் நீர் மூலம் இழப்பு -  நீரிழிவு நோய் ஆயிற்று.